கனடாவில் வேலை இழப்பு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

0 0

கனடியர்கள் (Canadians) மத்தியில் வேலை இழப்புக்கள் குறித்த பதற்றம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட புதிய கருத்துக்கணிப்பின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் நடக்கும் வர்த்தக போரின் விளைவாக வேலை இழப்புக்கான அச்சம் ஏற்படுத்துவதாக 40 வீதமான கனடியர்கள் தெரிவித்துள்ளனர்.

பல தொழில் நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை குறைக்கத் தொடங்கியுள்ளமையும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் ஏழாம் திகதி முதல் பத்தாம் திகதி வரை 1,500 இற்கும் மேற்பட்ட கனடியர்களிடம் இது தொடர்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில், ஒண்டாரியோ மாநிலத்தில் 50% இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பாதுகாப்பு தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இது நாட்டின் மிக அதிகமான விகிதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை இழப்புக்கள் தொடர்பில் பெண்களை விடவும் ஆண்கள் அதிகளவு கரிசனை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து தரப்பிலும் வேலை இழப்புக்கான அச்சம் இருப்பதால், கனடாவின் பொருளாதாரத்தில் நெருக்கடி நிலவி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.