புடினை விமர்சித்த ரஷ்ய பாடகர் மர்மான முறையில் மரணம்

14

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை(Vladimir Putin) “முட்டாள்” என்று விமர்சித்த அந்நாட்டு பாடகர் தனது வீட்டின் ஜன்னல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்ய (Russia) இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் வசித்து வந்துள்ளார்.

புடின் மற்றும் உக்ரைன் போரை ஸ்ட்ரோய்கின் சமூக ஊடகங்களில் பலமுறை விமர்சித்துள்ளார்.

கடந்த 2022 இல் தனது சமூக வலைதள பதிவில், இந்த முட்டாள் (புடின்) தனது சொந்த மக்கள் மீதும் சகோதர தேசத்தின் மீதும் போரை அறிவித்தார்” என்று பதிவிட்டிருந்தார்.

உக்ரைன் இராணுவத்திற்கு நன்கொடை அளித்ததாகவும், ஜனாதிபதி விளாடிமிர் புதினை “முட்டாள்” என்று அழைத்ததாகவும் அதிகாரிகள் அவரை விசாரித்து வந்தனர்.

பொலிஸ் விசாரணையின் போது ஜன்னலில் இருந்து கீழே விழுந்த அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் உக்ரைன் இராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பில் வெளியாகிய அறிக்கையின்படி, அவரது வீட்டில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது தண்ணீருக்காக சமையலறைக்குச் சென்றதாகவும், பின்னர் ஜன்னலை திறந்து கீழே குதித்ததாகவும் கூறப்படுகிறது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை விமர்சிப்பவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பதுமுதல் முறை அல்ல.

இதேபோன்று உக்ரைன் போரை வெளிப்படையாக விமர்சித்த ரஷ்ய பாலே நடனக் கலைஞர் விளாடிமிர் ஷ்க்லியாரோவ் உயரிழந்தார்.

அவர், கடந்த நவம்பரில் ஒரு கட்டடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து மர்மமான முறையில் குதித்து இறந்தாத செய்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.