முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும் தேசபந்து தலைமறைவாகி இருந்த காலப்பகுதியில் உதவிய அனைவரையும் கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் பயன்படுத்திய அனைத்து இலத்திரனியல் உபகரணங்களையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதனோடு தேசபந்து தென்னக்கோனுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மாத்தறை சிறை அத்தியட்சகருக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.