25 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்த காம்போ.. விஜய்யின் ஜனநாயகன் பட அப்டேட்

0 0

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கிறார்.

அதனால் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்துவிட்டார். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பல நடிகைகள் நடித்து வருகின்றனர்.

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை மோனிஷா பிளெஸியும் இப்படத்தில் நடிக்கிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் தளபதி விஜய்க்கு அப்பாவாக நடிகர் நிழல்கள் ரவி நடிக்க உள்ளாராம்.

நிழல்கள் ரவி இதற்கு முன் தளபதிக்கு தந்தையாக குஷி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், 25 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த காம்போ இணைந்து நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.