அரசியலை விட்டு விலகினால் 2009ஆம் ஆண்டு இருந்த அரசியலுக்கு உள்ளேயே தமிழ் மக்கள் மீண்டும் சென்று விடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் என்னால் வழக்கு தொடர முடியும். ஏனெனில் 77 நாட்கள் நாடாளுமன்ற அமர்வுகளில் சபாநாயகர் பேச விடாது தடுத்துள்ளார்.
என்.பி.பி அரசாங்கத்திற்கு நான் உயிரோடு இருப்பதில் பிரச்சினை இருக்கின்றது.
குறிப்பாக சிங்கள மக்களினாலோ அல்லது வேறு நபர்களாலோ எனக்கு பிரச்சினை இல்லை. சிறுபான்மை இனத்தவர்களாலேயே அதிக பிரச்சினை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.