அமெரிக்காவின் சட்டமா அதிபராக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாட் கேட்ஸ் மீது போதைப்பொருள் மற்றும் 17 வயது பெண்னை தவறான முறைக்கு உட்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க ஹவுஸ் நெறிமுறைக் குழுவின் அறிக்கை இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதித்துறையை வழிநடத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் வேட்பாளராக இருந்த இவர், பதவியில் இருந்த போதே மாநில சட்டங்களை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாட் கேட்ஸ் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளதோடு தன்னை விசாரித்த நபர்கள் தன் மீது ஒரு வித வெறுப்பை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
17 வயது பெண்ணுடன் தவறான முறையில் ஈடுபட்டமைக்காக பணம் செலுத்திய குற்றச்சாட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட்ட போதும் அவை பதிவு செய்யப்படவில்லை.
இவ்வாறான குற்றச்செயல்களை புரிவதற்காக அவர் 90,000 அமெரிக்க டொலர்களை செலவளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டிரம்ப் அவரை சட்டமா அதிபர் பதவிக்கு பரிந்துரைத்ததை அடுத்து, நவம்பரில் காங்கிரஸில் இருந்து மாட் கேட்ஸ் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.