ரஷ்யாவினால் வழங்கப்பட்ட இலவச உரத்தின் தரம் குறித்து வெளியான அறிவிப்பு

0 1

ரஷ்யாவில் (Russia) உற்பத்தி செய்யப்பட்டு  இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட மியூரேட் பொட்டாஷ் உரத்தின் (Muriate of Potash) இருப்பு தரத்திற்கு ஏற்ப உள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை விவசாயம், கால்நடை வளங்கள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

உர கையிருப்பின் நிறம் குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு இடையே சில விவாதங்கள் நடந்ததால், அமைச்சு இது தொடர்பாக விசாரணை முன்னெடுத்திருந்தது.

இந்த நிலையில் மண் விஞ்ஞான நிபுணர் ரேணுகா சில்வா (Renuka Silva) இந்த உரங்களின் தரத்தை சான்றளித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் எவ்வித சட்டவிரோத அச்சமும் கொள்ள வேண்டாம் என விவசாய அமைச்சு (Ministry of Agriculture) விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை திருகோணமலை (Trincomalee) – கிண்ணியா கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை கடந்த 18ஆம் திகதி விநியோகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.