கனடாவின் (Canada) ரொறன்ரோவில் (Toronto) வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெயிட்டுள்ளன.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் இவ்வாறு அதிகளவானோர் வேலைவாய்ப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாத புள்ளிவிபர தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நதிலையில், ரொறன்ரோவில் சுமார் 380000 பேர் தொழில் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதனடிப்படையில், ரொறன்ரோவின் வேலையற்றோர் எண்ணிக்கையானது 8.1 வீதமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் பின்னர் இவ்வாறு அதிக எண்ணிக்கையில் வேலையற்றோர் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.