அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வீட்டில் பெரும் சோகம் ஏற்பட்டது.
முன்னாள் முதல் பெண்மணியும் ஒபாமாவின் மனைவியுமான மிச்செல் ஒபாமாவின் தாயார் மரியன் ராபின்சன் (Marian Robinson) வெள்ளிக்கிழமை காலமானார்.
தற்போது அவருக்கு 86 வயதாகிறது என பராக் மற்றும் மரியன் குடும்ப உறுப்பினர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மரியன் தனது மகள் மற்றும் மருமகனுடன் வெள்ளை மாளிகையில் தங்கியிருந்தார். ஒபாமாவின் இரண்டு குழந்தைகளான மலியா மற்றும் சாஷாவை அவர் கவனித்துக் கொண்டார்.
மரியன் குடும்ப உறுப்பினர்களால் ‘முதல் பாட்டி’ (First Grandma) என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
மரியனின் மரணம் இரு குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த பலரும் மரியன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed.