இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய்!

9

தாவரவியல் பூங்காக்கள் மூலம் 2024 ஜூன் மாதம் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் எச்.ஜி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2022ஆம் ஆண்டு வருமானம் 420.02 மில்லியன் ரூபாவாகவும், 2023ஆம் ஆண்டு வருமானம் 901.1 மில்லியன் ரூபாவாகவும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 2024 வரை தாவரவியல் பூங்காவை பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 965,468 ஆகவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 183,674 ஆகவும் பதிவாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரையிலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது 96% அதிகரிப்பாகும் என கூறியுள்ளார்.

இதேவேளை 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவை பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முறையே 1,773,048 – 1,925,129 வரையிலான எண்ணிக்கையாக பதிவானதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முறையே 103,322 – 227,729 வரையில் காணப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.