கட்டுநாயக்காவில் திடீரென மூடப்பட்ட ஆடை தொழிற்சாலை – 1400 ஊழியர்களின் பரிதாப நிலை

0 0

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலை திடீரென மூடப்பட்டதால், 1,400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.

இந்த தொழிற்சாலையின் நிர்வாகம் முன்னறிவிப்பு இன்றி நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுத்துள்ளதால் ஊழியர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

தொழிற்சாலை தற்போது பூட்டப்பட்டுள்ளது, மேலும் பாதுகாப்பு பணியாளர்கள் மட்டுமே அங்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறியாமல், உதவியற்ற நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்தாண்டு விண்ணப்பித்தும் இதுவரை கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளாத பெருந்தொகையான மக்கள்

கடந்தாண்டு விண்ணப்பித்த கடவுச்சீட்டுகள் இன்னும் பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டுகளை பெறுவதில் மக்கள் பல சிக்கல்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு விண்ணப்பித்த 43,000 கடவுச்சீட்டுகள் தாமதமாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு பதிலளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, கடவுச்சீட்டு வழங்குவது ஏற்கனவே முறையான முறையில் நடைபெற்று வருவதாக சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.