ஜனாதிபதி போர்வீரர்களை இழிவுபடுத்துகின்றார்

0 1

 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போர்வீரர்களை இழிவுபடுத்துவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

30 ஆண்டு கால போரையும் இயற்கை அனர்த்தத்தையும் ஒப்பீடு செய்ததன் மூலம் ஜனாதிபதியின் போர் பற்றிய புரிதல் தெளிவாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மழையினால் ஏற்படக்கூடிய மண்சரிவிற்கு 30 ஆண்டுகளாக நீடித்த போர் வெற்றியை ஒப்பீடு செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி போர்வீரர்களை படைச் சிப்பாய்கள் சித்தரிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒருநாள் மட்டும் போர் வீரர்கள் போற்றப்படக் கூடாது எனவும் எந்தநாளும் அவர்கள் போற்றப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

உலகின் மோசமான பயங்கரவாத இயக்கமொன்றை வெற்றிகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான போர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டதல்ல எனவும் தற்போதைய ஜனாதிபதி பிழையான தகவலை கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

படலந்த அறிக்கையை பார்வையிட்டால் ஜே.வி.பி.யினர் எவ்வாறு படைவீரர்களை மதித்தார்கள் என்பது அம்பலமாகும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.    

Leave A Reply

Your email address will not be published.