இலங்கையர்களின் கண்களால் உலகை பார்க்கும் பல வெளிநாட்டவர்கள்

0 0

இலங்கையில் 2,275,678 பேர் மரணத்தின் பின் தங்கள் கண்களை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கண் தான சங்கம் 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து, இத்தனை பேர் முன்வந்துள்ளதாக, இலங்கை கண் தான சங்கத்தின் சர்வதேச கண் வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் ஜனத் சமன் மாதரஆரச்சி தெரிவித்துள்ளார்.

இதுவரை, இலங்கை நன்கொடையாளர்களால் தானமாக வழங்கப்பட்ட 1,844 கண்கள் 57 நாடுகளில் உள்ள 117 நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 587 கண்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.