கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

0 2

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல் கட்சிகள் தங்கள் அதிகபட்ச பலத்தை பயன்படுத்தி வருகின்றன.

அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை ஈர்க்க இரகசிய பேச்சுவார்த்தைகளும் இந்நாட்களில் இடம்பெற்று வருகின்றனர்.

அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகளை உறுதியளித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஈர்க்க பல கட்சிகள் செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் துணை மேயருக்கான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 2 ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய சூழ்நிலையில், இந்தத் வாக்கெடுப்பு மிகவும் பரபரப்பான திருப்பத்தை எடுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

எந்தவொரு கட்சியும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாததால், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்களை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

கொழும்பு மாநகர சபையின் நிர்வாக அதிகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், எதிர்க்கட்சி பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருப்பதால், ஆட்சி அதிகாரத்தை பெற உரிமை உண்டு என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.