இந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளது.
2024ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 84.67 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டியிருந்தது.
இதனுடன் ஒப்பிடும் போது, 121.8 சதவீதமாக இலங்கை மின்சார சபையின் இலாபம் சரிவடைந்துள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 5 காலாண்டுகள் மின்சார சபை இலாபத்தை ஈட்டியிருந்தது.
இதேவேளை, கடந்த 2024ஆம் ஆண்டில், இலங்கை வரலாற்றில் ஒரு வருடத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச இலாபமான 144 பில்லியன் ரூபாவை மின்சார சபை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.