இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதம் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களால் நேர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் விசேட வைத்தியர் சமிந்தி சமரகோன் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 2021ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் தொடர்பாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது நாட்டு மக்களில் 34.8 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களில் 64 சதவீதமானோர் இதற்கு எவ்வித மருந்துகளையும் பயன்படுத்தவில்லை என கூறியுள்ளார்.