பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறித்து விசாரணை

0 3

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்பு பேணும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் தேசியப் பாதுகாப்பு பற்றி பேசும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களது கட்சிகளில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் அங்கம் வகிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான 50க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நபர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி, சர்வஜன பலய உள்ளிட்ட பல கட்சிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சிலர் இவ்வாறு குற்றக் கும்பல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட சில எதிர்க்கட்சி வேட்பாளர்கள் திட்டமிட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர்கள் என அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.