இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

0 2

திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி173,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 14 ஆம் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

திறைசேரி உண்டியல்கள் 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 70,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளன.

மேலும் 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 73,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனை செய்யப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.