சர்வதேச உளவுத்துறையின் உதவியுடன் பாதாள உலகம் தொடர்பில் முக்கிய நடவடிக்கை

0 4

நாட்டை விட்டு தப்பிச் சென்ற 10 பிரபல பாதாள உலகத் தலைவர்களை விரைவாகக் கைது செய்வதற்காக இலங்கை பாதுகாப்பு தரப்பு சர்வதேச நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் சமீபத்தில் நடந்த பல கொலைகளில் அவர்களும் அவர்களது கும்பல்களும் நேரடியாக ஈடுபட்டிருப்பதால் இந்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் உண்மையான கடவுச்சீட்டுக்கள் மற்றும் போலி கடவுச்சீட்டுக்கள் தற்போது பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச உளவாளிகள் மூலம் அவர்களைப் பற்றிய உளவுத்துறை தகவல்கள் பெறப்படுவதாகவும் கூட்டிக்கட்டப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.