பாகிஸ்தானுக்கு பயணிக்கவேண்டாம்; அமெரிக்கா உட்பட நாடுகள் விடுத்துள்ள பயண எச்சரிக்கை

0 4

இந்தியா நிகழ்த்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பயணிப்பதற்கெதிராக அமெரிக்கா உட்பட பல நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளன.

தீவிரவாதம் மற்றும் போர் அபாயம் காரணமாக அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லவேண்டாம் என அமெரிக்க தன் குடிமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இருக்கும் பகுதிக்கு அருகில் கூட பயணிக்கவேண்டாம் என அமெரிக்கா விடுத்துள்ள பயண ஆலோசனை தெரிவிக்கிறது.

கனடாவும், பாகிஸ்தானுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், ஆப்கானிஸ்தான், மற்றும் சீனா, இந்தியா மற்றும் ஈரான் எல்லை பகுதிகளுக்கு பயணிப்பதைத் தவிர்க்குமாறும் தன் குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், ஏர் இந்தியா மற்றும் கத்தார் ஏர்வேஸ் உட்பட விமான நிறுவனங்கள் பாகிஸ்தான் பயணம் தொடர்பில் பயண ஆலோசனை வெளியிட்டுள்ளன.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், Dharamshala, Leh, ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் அம்ரித்ஸர் ஆகிய விமான நிலையங்கள் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாகவும் அதனால் விமான புறப்பாடு, வருகை மற்றும் அடுத்தடுத்த விமான சேவைகளும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.