நான்கு மாதங்களுக்குள் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு

0 5

கடந்த நான்கு மாத காலப்பகுதிக்குள் இலங்கையில் 42 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஜனவரி மாதம் தொடக்கம் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மேற்குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் காரணமாக தற்போதைக்கு 29 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

அதே நேரம் காயமடைந்தவர்களில் ஒருசிலர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் ஒரேயொரு சம்பவத்தில் மட்டும் எந்தவொரு நபரும் பலியாகவோ, எவருக்கும் காயம் ஏற்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Leave A Reply

Your email address will not be published.