முன்னிலை சோசலிசக் கட்சியின் முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் தெரிவு

0 1

முன்னிலை சோசலிசக் கட்சிக்கான முதலாவது மக்கள் பிரதிநிதி கேகாலையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜே.வி.பி.யின் முன்னாள் முக்கிய தலைவர்களில் ஒருவரான குமார் குணரத்தினம், தனியாகப் பிரிந்து வந்து முன்னிலை சோசலிசக் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சியொன்றை ஆரம்பித்தார்.

அக்கட்சி இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாட்டின் பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

இந்நிலையில், வாக்களிப்பின் பின்னர் வெளிவந்து கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் முன்னிலை சோசலிசக் கட்சியில் இருந்து கேகாலை மாநகர சபைக்கு ஒரு மக்கள் பிரதிநிதி தெரிவாகியள்ளார்.

கேகாலை மாநகர சபைக்கான தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சி 272 வாக்குகளைப் பெற்று இந்த ஆசனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

அதன் பிரகாரம் கேகாலை மாநகர சபையில் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சிக்கு தேர்தல் மூலம் முதலாவது மக்கள் பிரதிநிதி தெரிவாகியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.