லண்டனில் வீதியில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

0 0

பிரித்தானியாவின் லண்டனில் வீதி ஓரத்தில் வசிக்கும் இலங்கை இளைஞன் தொடர்பில் பிபிசியின் ஆவண படம் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கைக்காக மாணவர் வீசாவில் சென்ற நதீர என்ற மாணவன், வீடற்ற நபராக வீதி ஓரத்தில் வசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

பிபிசி ஆவணப்படத்தின் அடிப்படையில் இரண்டு மருத்துவ உதவியாளர்கள் குறித்த மாணவனுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

ஹன்னா மற்றும் நியால் ஆகிய இரண்டு அதிகாரிகள், இந்த மாணவனை நேரில் சென்று பார்வையிட்ட போது ,அவர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையிலுள்ள மாமாவின் உதவியுடன் பிரித்தானியாவுக்கு வந்த நிலையில், தற்போது இலங்கையில் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மாமா உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் தனக்கான நிதி உதவியை செய்ய யாரும் இல்லாத நிலையில் வாகனம் நிறுத்துமிடத்தில் வசிப்பதாக நதீர குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சென்று வரும் போதும், தனக்காக யாரும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வீதி ஓரத்தில் தங்கியிருக்கும் வேளையில், அந்தப் பகுதியிலுள்ள போதைப்பொருள் பாவனையாளர்களால் தான் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிபிசி காணொளியை பார்வையிட்ட சிலரினால் நதீரவுக்கு உதவி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், இலங்கை மாணவனுக்கு தங்குமிடம் கொடுக்கப்பட்டுள்ளதுடன், நிரந்தர வேலையும் ஒன்றும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.