அநுரவை நெருக்கடிக்குள் தள்ளும் அரசியல்வாதிகள்! அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

0 2

திருடர்களை பிடிக்கப் போவதாக ஆட்சிக்கு வந்துள்ள அநுர அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் 600 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை 100 லட்சம் ரூபாய்க்கு கொள்வனவு செய்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக குற்றவியல் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முறைப்பாடு செய்ய போவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

திருட்டு எப்போதும் இல்லாத அளவுக்கு நடக்கிறது. மோசடி மற்றும் ஊழல் நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அனுராதபுரத்தில் அமைச்சர் ஒருவர் 600 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை 100 லட்சம் ரூபாய்க்கு பதிவு செய்துள்ளார்.

மோசடி சொத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்ட சொத்தை மீண்டும் கையகப்படுத்த முடியும். அந்த சட்டத்திற்கு அமைய முதலாவது முறைப்பாடு அமைச்சருக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ளது.

வர்த்தக அமைச்சுடன் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம் இதற்கு பணம் செலுத்தியதாக தகவல் தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

100 லட்சம் ரூபாயில் வீட்டை மாற்றும் பத்திரத்தில் தேசிய மக்கள் சக்தியின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே கையெழுத்திட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

திருட்டையும் மோசடியையும் ஒழிப்பதாக ஆட்சிக்கு வந்தார்கள், ஆனால் இன்று அவர்கள் இரட்டை வண்டிகளில் சென்று திருடுகிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.