தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தை வைத்து தேர்தல் பிரசாரம்! பொலிஸார் விசாரணை

0 1

முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தமிழரசு கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த முள்ளியவளை கிழக்கு பிரதேசத்தில் வேட்பாளர் பல வீடுகளுக்கு சென்று தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படம் பொறிக்கப்பட்ட வீட்டு சின்னத்துக்கு புள்ளடி இடுமாறு துண்டு பிரசுரங்களை வழங்கி வந்துள்ளார்.

இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு துண்டு பிரசுரங்கள் வாங்கிய மக்களிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு ஒன்று செய்துள்ளார்கள்.

இதேவேளை குறித்த வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரை தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதுவரை அவர் எந்தவித தொடர்புகள் அற்ற நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை வேட்பாளரின் இந்த செயற்பாட்டுக்கு ஏனைய கட்சிகளும் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.