அமெரிக்கப் பொருட்களை மேலும் இறக்குமதி செய்வதாகவும், கட்டணங்களை திருத்துவதாகவும் இலங்கை உறுதியளித்துள்ளது.
அமெரிக்க வர்த்தகத் தலைவருடனான பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கக்குழு இந்த உறுதியை வழங்கியுள்ளது.
அத்துடன், டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட புதிய வரிகளைத் தொடர்ந்து வர்த்தகப் பிரச்சினைகளைத் தீர்க்க அமெரிக்காவிடம் இருந்து திட்டங்களையும் இலங்கை கோரியுள்ளது.
அதே நேரத்தில் எல்என்ஜி, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் வாகனங்களை இறக்குமதி செய்ய, இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கையின் குழு அடுத்த வாரமும், வாஷிங்டனில் தங்கி, இரு தரப்பினருக்கும் இடையே ஒரு கொள்கை உடன்பாட்டை எட்ட எதிர்பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.