க்ளீன் ஸ்ரீலங்கா என்ற தூய்மையான இலங்கை திட்டத்தின் ஒரு பகுதியாக, வரலாற்று சிறப்புமிக்க கண்டி நகரம், தலதா வந்தனாவா என்ற புனித தந்த நினைவுச்சின்ன வழிபாடுக்காக சென்ற பக்தர்களின் கூட்டு முயற்சியுடன்,முழுமையாக சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் நேற்றையதினம்(27) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தூய்மையான இலங்கை செயலகத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியில், இளைஞர்கள், பெரியவர்கள் மற்றும் அமைப்பின் அதிகாரிகள் உட்பட பல தன்னார்வ குழுவினர் தீவிரமாக பங்கேற்றனர் இந்த திட்டத்தின் கீழ், கண்டி நகரம் முழுவதும் வெற்றிகரமாக சுத்திகரிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சுமார் 600 தொன் குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.