காஷ்மீர் தாக்குதல் விவகாரம்! ஐ.நா விடுத்துள்ள வேண்டுகோள்

0 3

பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும், பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்கப்பட வேண்டும் என ஐ. நா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஐ.நா கோரிக்கை முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் கருத்து வெளியிட்ட ஐ. நா பிரதிநிதி ஸ்டீபன் டுஜாரிக்,

“ஐ.நா. பொதுச்செயலாளர் நிலைமையை மிக நெருக்கமாகவும் மிகுந்த அக்கறையுடனும் கண்காணித்து வருகிறார் என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, 22 ஆம் திகதி ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாங்கள் மிகவும் தெளிவாகக் கண்டனம் தெரிவித்தோம்.

இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். எனினும், அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும், அர்த்தமுள்ள, பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்க முடியும் என்றும், தீர்க்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.