யேமனின் (Yemen) ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாக ஹவுத்திகளுடன் தொடர்புடைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கப் படைகள் நாட்டின் மீது நடத்திய மிகக் கொடூரமான தாக்குதல்களில் இதுவும் ஒன்றாகும் என குறி்பிடப்பட்டுள்ளது.
2023 நவம்பர் முதல் தொடர்ந்து குண்டுவீச்சுக்கு உள்ளாகி வரும் செங்கடல் கப்பல் பாதைகளை ஹவுத்திகள் குறிவைப்பதை நிறுத்தாவிட்டால் தாக்குதல்கள் நிறுத்தப்படாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
எனினும், காசாவில் நடக்கும் போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தங்கள் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக ஹவுத்திகள் கூறுகின்றன.
இந்நிலையில், இறப்புகள் மற்றும் காயங்கள் குறித்து அமெரிக்கா எந்த தகவல்களும் வெளியிடவில்லை.
மேலும், செங்கடலில் வணிக மற்றும் இராணுவக் கப்பல்களுக்கு எதிராக ஹவுத்திகள் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ஹவுத்திகளுக்கு எதிராக இதேபோன்ற ஏவுகணைத் தாக்குதல்கள் பைடன் நிர்வாகத்தால் பலமுறை மேற்கொள்ளப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.