வன விலங்குகள் தொடர்பில் மேலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்

0 4

வனவிலங்குகள் தொடர்பில் மேலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் விலங்குகளின் கணக்கெடுப்பின் அறிக்கை வரும் 28ஆம் திகதி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இது முழுமையான வெளிப்படையான அறிக்கையாக கருத்திற்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் சில தருணங்களில் மீண்டும் இந்த கணக்கெடுப்புகளை மேற்கொள்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

காடுகளின் விலங்குகள் கணக்கெடுப்பின் மூலம் விலங்குகளை எவ்வாறு கையாள முடியும் என்பது குறித்து ஆராய முடியும் என தெரிவித்துள்ளார்.

அதன்படி அதிக விலங்குகளை வெளிநாட்டுக்கு அனுப்புவது அல்லது வேறு நடவடிக்கைகள் எடுப்பதா என்பது குறித்து குறித்து தீர்மானிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கே.டி. லால்காந்த இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.