பிரித்தானிய தடையை அடுத்து கருணாவிற்கு இலங்கைக்குள் ஆபத்து

0 6

2009 ஆம் ஆண்டு இலங்கையில் முடிவடைந்த உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கையின் மூன்று முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் ஒரு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் இராணுவத் தளபதி மீது பிரித்தானியா கடந்த திங்கட்கிழமை தடைகளை விதித்தது.

பிரித்தானியாவுக்கு பயணம் செய்வதற்கான தடைகள் மற்றும் சொத்து முடக்கம் உள்ளிட்ட இந்த நடவடிக்கைகள், இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் தலைமைத் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோரை குறிவைக்கின்றன.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் இராணுவத் தளபதி கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டது.

போர் முடிவதற்கு முன்பு விநாயகமூர்த்தி முரளிதரன் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து பின்னர் இலங்கை இராணுவத்திற்காக தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

அரசாங்கப் படைகளுக்கும் தமிழ் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான 26 ஆண்டுகாலப் போரில் 80,000 – 100,000 பேர் இறந்ததாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

இலங்கையின் இராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

அவற்றில் நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் அத்துமீறல், மற்றும் போர் முடிவடைந்து நீண்ட காலத்திற்குப் பிறகு கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் ஆகியவை அடங்கும்.

இந்நிலையில், தற்போது பிரித்தானியா விதித்துள்ள தடையானது கருணாவிற்கு இலங்கைக்குள் ஆபத்தாக மாறியுள்ளது என அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.