நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நீடிக்கும் பதற்றம்! களத்திற்கு விரைந்த நோயாளர் காவு வண்டி

0 12

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழல் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பொல்துவ சந்திக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலையில்லா பட்டதாரிகள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது பொலிஸார் அதனை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்ட பட்டதாரிகளை தடுக்கும் செயற்பாட்டில் பொலிஸார் ஈடுபட்டிருந்த போது, சில யுவதிகள் கீழே விழுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த பதற்றமான சூழலில் யுவதில்கள் சிலர் காயமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக சம்பவ இடத்திற்கு நோயாளர் காவுவண்டி வரவழைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற நுழைவாயிலுக்குள் பிரவேசிக்க முயன்றபோது இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பகுதியில் போராட்டங்கள் நடத்துவதற்கு எதிராக சமீபத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பின்னணியில் அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.