வெலிகம ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட ஏனைய ஆறு சந்தேக நபர்களும் இன்று (21) நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
குறித்த ஆறு சந்தேக நபர்களும் நீதிமன்றில் மனு ஒன்றினை சமர்ப்பிப்பதன் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி அன்று மாத்தறை வெலிகம ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்கள் மீது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீண்ட நாள் தலைமறைவிற்கு பின்னர், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கடந்த 19ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.