நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து தற்போதைய அரசாங்கமே மீட்டது என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நாடு மிகவும் குறுகிய காலத்திற்குள் ஸ்திரத்தன்மைக்கு திரும்பியிருப்பதனால், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் பாரிய வெற்றி பெறும் என பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீதி அனைவருக்கும் சமமாக செயற்படும் நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெற்றியடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த நான்கு மாதங்களில் அரசாங்க நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தாலும், பொதுமக்கள் அரசாங்கத்தின் மீது கூடுதல் நம்பிக்கையுடன் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் கம்பஹா மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.