அச்சுறுத்தினால் தக்க பதிலடி நிச்சயம்: ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை

0 3

யாரேனும் தங்களை அச்சுறுத்தினால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான்(Iran) எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏமனில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து பதிலளிக்கையிலேயே ஈரான் பாதுகாப்புப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராணுவம் ஏமனில் மேற்கொண்ட தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 101 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கான உத்தரவை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (Donald Trump) பிறப்பித்த நிலையில் அவர் சமூக வலைத்தள பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே ஈரான் பாதுகாப்புப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சி படைக்கு ஈரான் ஆதரவு தரக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.