கம்பஹாவின் கிரிந்திவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றர்.