கனடாவின் (canada) ரொறன்ரோவில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக வாகன சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
ரொறன்ரோவில் (Toronto) சுமார் 15 சென்டிமீட்டர் அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கனடிய சுற்றாடல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதனால் வாகனங்களில் பயணம் செய்யும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வாகன சாரதிகளினால் வீதியை தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக பல்வேறு வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே வாகனங்களை மெதுவாக செலுத்துமாறு காவல்துறையினர் சாரதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.