பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் (London) உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில் 170 வெடிகுண்டுகள் மீட்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பூங்கா விரிவாக்கப் பணிக்காக கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற பள்ளம் தோண்டும் பணியில் இதுவரையில் 170க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றின் மொத்த எடை சுமார் 500 கிலோ என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த வெடிகுண்டுகள் இரண்டாம் உலகப்போர் (2nd world war) கால கட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டவை என்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து அவற்றைச் செயலிழக்கச் செய்யும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுவர் பூங்காவில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையால் குறித்த பூங்கா விரிவாக்கப் பணியை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.