அமெரிக்காவில்(USA) சிறுமியர் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுகளில் மூன்றாம் பாலினத்தவர் பங்கேற்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால்(Donald Trump) தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்தே அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார்.
அந்த வகையில், தற்போது இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான விளையாட்டு வீராங்கனையர் முன்னிலையில், இதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
“விளையாட்டில் பெண்களுக்கு எதிரான போரை நிறுத்தியுள்ளேன்” என அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தேசிய கல்லுாரி விளையாட்டு சங்கத்தின் புள்ளி விபரங்களின்படி, 1,100 விளையாட்டு பள்ளிகளில் 5.30 லட்சம் பேர் பயிற்சி பெறுகின்றனர்.
இதில், 10 பேர் மட்டுமே மூன்றாம் பாலினத்தவர்களாவர். டொனால்ட் ட்ரம்பின் இந்த புதிய உத்தரவுக்கு இந்த சங்கம் வரவேற்பளித்துள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போதே, இந்த வாக்குறுதியை ட்ரம்ப் அளித்திருந்தார்.
மூன்றாம் பாலினத்தவர், பெண்கள் பிரிவில் பங்கேற்பதற்கு, 25 மாகாணங்களில் ஏற்கனவே தடை சட்டம் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.