கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்கும் அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கான 6000 ரூபாய் கொடுப்பனவு கடந்த வௌ்ளிக்கிழமை அஸ்வெசும வங்கி கணக்குகளுக்கு திறைசேரி ஊடாக வழங்கப்பட்டுள்ளது
நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக எதிர்மறையான முடிவுகளால் பாடசாலை மாணவர்களின் கல்வியில் எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாடசாலை செல்லும் குழந்தைகளில் 55 சதவீதம் பேர் கல்வியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதுடன் கிராமப்புறங்களிலும் பெருந்தோட்டப் பகுதிகளிலும் இந்த சதவீதம் அதிகம் காணப்படுவதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகைய பாதிப்புக்களை எதிர் நோக்கியுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வியில் எதிர்மறையான தாக்கத்தை குறைக்கும் நோக்கத்தில், 2025 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களின் படிப்பைத் தொடங்குவதற்குத் தேவையான எழுதுபொருட்களை வாங்குவதற்கு உதவித்தொகையை வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிவாரணத் திட்டத்தில் சேர்க்கப்படாத மற்ற தகுதியுள்ள பாடசாலை மாணவர்களுக்க ரூ. 6,000 மதிப்புள்ள எழுதுபொருட்கள் பெற 2025 ஆம் ஆண்டில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு தேவையான ஒதுக்கீடுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் உரிய முறைமையின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதன் மூலமும் கல்வியைத் தொடர்வதன் மூலமம் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.