2023 இல் காவல்துறையால் தீர்க்கப்படாத ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள்

0 6

2023 ஆம் ஆண்டு தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற 2448 பொது முறைப்பாடுகளில் 77 வீதமானவை அந்த வருடத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த ஆண்டு பெறப்பட்ட பொதுமக்கள் முறைப்பாடுகளில் 1887 முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

2023ஆம் ஆண்டு பெறப்பட்ட பொதுப் முறைப்பாடுகளில் 561க்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட பொதுமக்கள் முறைப்பாடுகளில் 2023ஆம் ஆண்டில் 1090 விசாரணைகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

தேசிய காவல்துறை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறும் பொதுப் முறைப்பாடுகளில் பெரும்பாலானவை காவல்துறையின் செயற்பாடுகளின்மை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாரபட்சமான முறைப்பாடுகள் கூறப்பட்டுள்ளது.

மொத்த முறைப்பாடுகளில் 33 சதவீதம் காவல்துறையினர் செயல்படாதது தொடர்பான முறைப்பாடுகள் என்றும், 20 சதவீதம் காவல்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்கானவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.