கைதான பிரித்தானிய தமிழர் – இலங்கை செல்ல அச்சத்தில் புலம்பெயர் தமிழர்கள்

0 6

அண்மையில் பிரித்தானிய பிரஜையான இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டமையானது அனைத்து புலம்பெயர் ஈழத்தமிழர்களையும் பாதித்துள்ளதென ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா (KV Thavarasa) தெரிவித்துள்ளார்.

இவ்வாறான கைதுகளினால் புலம்பெயர் தமிழர்களின் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைவதுடன் சுற்றுலாத்துறையிலும் பாரிய பாதிப்புகள் ஏற்படுத்தும் என்றும் கே.வி தவராசா குறிப்பிட்டுள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

உலகத்தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மற்றும் உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரஜையான இலங்கைத் தமிழர், விடுதலை புலிகளின் மீள் உருவாக்கத்திற்காக நிதி திரட்டி இலங்கைக்கு அனுப்பியதாக 2012 ஆம் ஆண்டு குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதுடன் அவருக்கெதிராக பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.

குறித்த பிரித்தானிய பிரஜை தனது தாயாரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்ற புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கடந்த 17 ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா முன்னிலையாகியிருந்தார்.

இதையடுத்து, ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தை அடுத்து கொழும்பு நீதிமன்றால் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜையான தமிழர் விடுதலை செய்யப்பட்டார்.

பிரித்தானிய பிரஜை தொடர்பான வழக்கு அனைத்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் இலங்கைக்கு பயணம் செய்யும் விடயத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ஏற்படுத்தி உள்ளதாக இதன்போது கருத்து ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.