நிதிக்குழு உள்ளிட்ட நாடாளுமன்ற குழுக்களை நியமிப்பு இன்றையதினம் (06.12.2024) பிற்பகல் தீர்மானிக்கப்படும் என சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
இடைக்கால பாதீட்டுத் திட்டம் மீதான இரண்டாவது நாள் விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று கூட்டப்பட்டு திகதிகள் தீர்மானிக்கப்படும் எனவும் அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான பாதீடு முன்வைக்கப்படும் வரை அரச செலவினங்களை மேற்கொள்வதற்கான கணக்கு வாக்கு பணம் மற்றும் இந்த வருடத்தின் எஞ்சிய காலப்பகுதிக்கான அத்தியாவசிய செலவுகளை முன்னெடுப்பதற்கான குறை மதிப்பீட்டு ஒதுக்கம் மீதான வாக்கெடுப்புகளும் இடம்பெறவுள்ளது.
கணக்கு வாக்கு பணத்தின் கீழ் 1,402 பில்லியன் ரூபாய்க்கு அதிக நிதியும், குறை மதிப்பீட்டு ஒதுக்கத்தின் கீழ் 215 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதியையும் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.