நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் (Parliamentary Election) தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு இன்று (06) நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.
தேர்தலில் போட்டியிட்ட 8361 வேட்பாளர்களில் 1985 பேர் மட்டுமே அந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்ஏ.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) குறிப்பிட்டார்.
690 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களில் இதுவரை 106 அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் மட்டுமே உரிய சமர்ப்பிப்புகளைச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தேசிய பட்டியலில் அறிவிக்கப்பட்ட 527 வேட்பாளர்களில் 57 பேர் மாத்திரமே வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளைக் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த காலத்திற்குள் உரிய அறிக்கைகளை வழங்காத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் உள்ளூராட்சி சபை தேர்தலை (Local government election) விரைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.