ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் கோடை காலத்தில் ஏற்படும் நீர் பற்றாகுறை பிரச்சினைக்கு தீர்வாக புதிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீர் பற்றாகுறையை தீர்ப்பதற்காக பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு, பூமிக்கடியில் நீரை சேமிப்பதற்காகவே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அவ்வாறு தோண்டப்படும் பள்ளங்களில் மழை நீரை சேகரித்து, அந்த நீரை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பி பயன்பாட்டுக்கு உகந்த நீராக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், இதுவரை ஒன்பது சேமிப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கன மழை பெய்யும் பொழுது நிரம்பி வழியும் கழிவு நீர் பிரச்சினைக்கு இந்த பிரம்மாண்ட பள்ளங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதன்போது, சேமிக்கப்படும் கழிவு நீரை சுத்திகரித்து, மழையின் பின் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆறுகளில் விடுவதற்கான திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறான திட்டங்களினால் மழைநீர் வீணாவதைத் தடுப்பதுடன்அந்த நீரை சேகரித்து சுத்திகரித்து பயிர்களுக்கு பயன்படுத்த கூடியதாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
Comments are closed.