தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்

14

இலங்கையில் (Sri Lanka) இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை ஆட்பதிவு திணைக்களத்தின் (Department for Registration of Persons) ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி கூறியுள்ளார்.

அந்தவகையில், தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.