மாவனல்லை பகுதியில் 6 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் உட்பட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான குழந்தை தொடர்பில் அயலவர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் நால்வரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பிலான காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
குழந்தை தற்போது தனது தாயுடன் மாவனல்லை, அரநாயக்க, எலகஸ்தன்னவில் வசித்து வருவதாகவும், தாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தையின் தந்தை தாயை பிரிந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கல்வி கற்கும் வயதாகியும் பாடசாலைக்கு குழந்தை அனுப்பப்படாமல் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், தாய் உட்பட இரு வயோதிபர்கள் அவ்வப்போது கொடூரமாக தாக்கி வந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், குழந்தையை தாக்கியதாக கூறப்படும் இரண்டு வயோதிபர்கள், குழந்தையின் தாய் மற்றும் தாக்குதலை ஊக்குவித்ததாக கூறப்படும் அயலகப் பெண் ஆகியோர் அரநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.