கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்!

16

துருக்கிய கப்பல் ஒன்று உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

துருக்கிய (Turkey) கடற்படையின் டி.சி.ஜி கினாலியாடா என்ற இந்த கப்பல் 152 மாலுமிகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை  இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் கட்டளை அதிகாரியாக செர்கன் டோகன் என்பவர் கடமையாற்றுகிறார்.

டோகனுக்கும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேராவுக்கும் (Saman Perera) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்றும் இங்கு இடம்பெற்றுள்ளது.

மேலும் அந்த கப்பலின் மாலுமிகள் இலங்கையின் முக்கிய இடங்களை பார்வையிட பல பகுதிகளுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments are closed.