நாட்டில் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் முக்கியமான பிரச்சினையாக முறையான அடையாளங்கள் இன்றிய சிம் அட்டைகளின் பாவனை காணப்படுவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Kanaka Herath) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இவற்றுள் சுமார் இரண்டு மில்லியன் சிம் அட்டைகள் முறையான அடையாளங்கள் இன்றி பாவனையில் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிம் அட்டைகளை பெற்றுக்கொள்ளும் போது அடையாள அட்டைகள் கோரப்படவில்லை எனினும் புதிய சட்டத்தின்படி சிம் அட்டையை பெற்றுக்கொள்வதற்கு அடையாள அட்டையை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் முறையான அடையாளங்கள் இன்றி பெறப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் சிம் அட்டைகள் தற்போது பாவனையில் உள்ளதாகவும் மற்றும் இது சில குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடிப்பதில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் கனக ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.