இந்திய- இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம்: சீனா உடனடியாக பதிலடி

0 0

இந்தியா , இலங்கை உடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் காரணமாக சீனா உடனடியாக பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

அத்தோடு, சீனா ஏற்கனவே பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அக்கட்சியின் கல்வி செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

கடந்த எழுபது ஆண்டுகளாக இலங்கை எந்த நாட்டுடனும் இவ்வாறான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில்லை என்றும் இது வரலாற்றில் மிக மோசமான காட்டிக்கொடுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் சீனா , இலங்கையை இந்திய-அமெரிக்கா ஆதரவு நாடாக கருதத் தொடங்கியுள்ளதாகவும், அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த புதிய பாதுகாப்பு கூட்டணியை அமைக்க சீனா தொடங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.